5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.





