--- --:--:-- --

ஆன்லைன் வகுப்பு பிடிக்காததால் தற்கொலை செய்துகொண்ட 9 ஆம் வகுப்பு மாணவன்..!

13

சென்னையில் ஆன்லைன் வகுப்பு பிடிக்கவில்லை என கூறிவந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணை மேடவாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்த செல்வகுமார், சுந்தரியின் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

 

கொரொனா ஊரடங்கால் பள்ளி திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்தார். தினமும் 6 மணி நேரம் ஆன்லைன் ஒதுக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 

இறுதியாக தனது பாட்டியிடம் தொலைபேசியில் பேசும் போது ஆன்லைன் வகுப்பு பிடிக்கவில்லை என கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக பள்ளிக்கரணை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon