கள்ளகுறிச்சியில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்ந்த நபர்…!
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தன்னைக் கடித்த கட்டுவிரியன் பாம்பு கடித்து வந்த நபருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தேன்குழல் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஐயப்பன் என்பவர் பணியில் ஈடுபட்டிருந்த போது கட்டுவிரியன் பாம்பு கடித்து விட்டது.
அந்த பாம்புடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.






