இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ2000 நோட்டுக்கள் 98.47 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையின் மூலம் பெரும்பாலான நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.