கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு..!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். ராணுவ வளாகத்திற்கு அருகே குடிசை அமைத்து சில தொழிலாளர்கள் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் காணாமல் ராணுவ வளாகத்தின் சுவர் இடிந்து குடிசைகளின் மேல் விழுந்துள்ளது. இதன் காரணமாக 9 தொழிலாளர்கள் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக இரண்டு லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.





