இந்தியா-சீனா எல்லை பிரச்னை தொடர்பாக 7ஆவது சுற்று பேச்சுவார்த்தை..!
இந்தியா – சீனா இடையே லடாக் எல்லை பிரச்சினை தொடர்பான ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கும் நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மத்திய அமைச்சர்கள் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் நிலையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தியா – சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த மே மாத மத்தியிலிருந்து பிரச்சனைகள் அதிகரிக்கிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லையில் அமைதி நிலவ படைகள் குவிப்பு, எல்லை விரிவாக்க நடவடிக்கை தடுத்தல் உள்ளிட்ட ஐந்து அம்ச உடன்பாட்டை இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மத்தியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை நாளை மறுநாள் கிழக்கு லடாக்கிலுள்ள சூசன் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடுகள் குறித்து முடிவெடுப்பதற்காக மத்திய அமைச்சர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் இராணுவத் தளபதி, விமானப்படை தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.







