திருமண விருந்தில் சாப்பிட்ட 74 பேருக்கு உடல்நலக்குறைவு..!
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண விருந்தில் சாப்பிட்ட எழுபத்தி நான்கு பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. சூரஜ் வாடா கிராமத்தில் இரவு நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு சாப்பிட்டவர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் உடனடியாக அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடல்நலம் பாதித்தவர்களில் பெரும்பாலும் 10 முதல் 20 வயது உடையவர்கள் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பாதிப்பிற்கான காரணம் குறித்து அறிவதற்காக விருந்தில் பரிமாறப்பட்ட உணவை அதிகாரிகள் ஆய்வு கணித்து வைத்துள்ளனர்.






