ரேஷன் கடையில் 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கொள்ளை..!
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரொனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்குவதற்கான ரேஷன் கடையில் 7 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நள்ளிரவில் ரேஷன் கடையில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.




