கண்களை கட்டிக்கொண்டு 1 கி.மீ தூரம் சைக்கிள் ஒட்டிய 6 வயது சிறுவன்..!
புதுச்சேரியில் 6 வயது சிறுவன் சாய் பிரணவ் இரண்டு கண்களையும் கட்டிக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிள் போட்டியில் உலக சாதனை படைத்திருக்கிறார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பிறந்த நாள் மற்றும் அனைத்து வகை மாணவர்கள் தினத்தை ஒட்டி வெளியூரை சேர்ந்த சாய் பிரணவ் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் மற்றும் இதர வன்கொடுமைகளை கண்டித்து கண்களை கட்டிக்கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி ஒட்டி உலக சாதனை நிகழ்த்தினார். இதற்கு முன்பும் இவர் பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளார்.







