--- --:--:-- --

சொத்துக்காக குழந்தை உட்பட 6 பேர் வெட்டிக் கொலை..!

6

ந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். ஜூடாட்டா எனும் ஊரைச் சேர்ந்த ரமணா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்பள ராஜூ என்பவருக்கும் சொத்து தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

நேற்றிரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த ரமணா அவர் மனைவி, அவர்களின் 2 வயது மகன், 2மாத குழந்தை அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பெண்கள் என ஆறு பேரும் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

 

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து ரமணா உடன் ஏற்கனவே முன்பகை கொண்டு இருந்த பலரை கைது செய்த அப்பள ராஜூவை விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon