ரயிலில் கடத்தப்பட இருந்த 6.8 கிலோ தங்கம் பிடிபட்டது..!
திருச்சி ரயில் நிலையத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேரிடம் இருந்து சுமார் 7 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .
காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் விரைவு ரயிலில் தங்கம் கடத்தப்படுவதாக குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அந்த ரயில் திருச்சியை அடைந்த பொழுது அதில் இருந்த பயணிகளின் உடைமைகளை அவர்கள் சோதனையிட்டனர்.
அப்பொழுது மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 பேர் திருச்சியை சேர்ந்த அனுமன் ஆகியோர் 6.8 கிலோ எடையுள்ள தங்க நகைகள் வைத்துள்ளனர். வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தது என்பதால் நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





