தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5956 பேருக்கு தொற்று உறுதி..! 94 பேர் உயிரிழப்பு..! கோவை, சேலத்தில் பாதிப்பு கிடுகிடு!!
தமிழகத்தில் இன்று 5956 பேருக்கு கொரோ பாதிப்பு உறுதியான நிலையில் 94 பேர் உயிரிழந்துள்ளனர். கோவை மற்றும் சேலம் மாவட்டத்தில் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் கடந்த இரு நாட்களாக 6 ஆயிரத்தை தாண்டிய நிலையில் இன்றைய பாதிப்பு 6 ஆயிரத்திற்கு கீழாக மீண்டும் சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறையின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நேற்று தமிழகத்தில் 6495 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 5956 ஆக சற்று குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 4,28,041 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழப்பு 91 ஆக பதிவான நிலையில். மொத்த எண்ணிக்கை 7, 322 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னையில் தொடர்ந்து தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்தே பதிவாகி எண்ணிக்கை மேலும் அதிகரித்தே வருகிறது. நேற்று 1427 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அந்த எண்ணிக்கை 1150 ஆக சற்று குறைந்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் இன்றும் அதிகபட்ச எண்ணிக்கையில் 589 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்து சேலத்தில் 497 பேருக்கும், செங்கல்பட்டில் 347, கடலூரில் 307 , திருவள்ளுரில் 299, என மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்த படியாக கோவை, சேலத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிப்பதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாளை முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு, இ-பாஸ் ரத்து, மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்து க்கு அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவல் அதிகரிக்குமோ? என்ற அச்சமும் ஒரு பக்கம் நிலவுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





