--- --:--:-- --

நீட், ஜெ‌இ‌இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உத்திரப்பிரதேசத்தில் போராட்டம்..!

10

நீட், ஜெ‌இ‌இ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி உத்திரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தி சமாஜ்வாதி கட்சியினர் மீது காவல்துறை தடியடி நடத்தியது. லக்னோவில் திரண்ட சமாஜ்வாதி கட்சி மாணவர் பிரிவினர் கொரொனா பிரிவிக்கு இடையிலும், நீட், ஜெ‌இ‌இ போன்ற தேர்வு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.

 

காவல்துறை தடுத்ததால் பெண்கள் உட்பட போராட்டக்காரர்கள் அனைவரும் சாலையில் அமர்ந்து முழக்கமிட்டனர். அவர்கள் மீது சரமாரியாக தாக்கிய போலீஸ் ஓட ஓட விரட்டி அடித்தது. போலீஸ் தாக்குதலால் பலருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸ் கைது செய்தது.

 

ஏற்கனவே கடந்த 4 நாட்களுக்கு முன்பும் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்திய சமாஜ்வாதி கட்சியினர் மீது போலீஸ் தடியடி நடத்தியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon