கொரொனா தடுப்பூசி செலுத்துக்கொள்ள 50 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்..!
பெருந்தொற்று தடுப்பூசி செலுத்துக்கொள்ள 50 லட்சம் பேர் தங்கள் பெயர்களை கோவின் இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதைக் கடந்தவர்களுக்கு பெருந்தொற்று தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.
இதற்காக கோவின் இணையதளத்தில் பெயர்களைப் பதிவு செய்யும் வசதியும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பெருந்தொற்று தடுப்பூசியை எடுத்துக்கொள்ள இதுவரை 50 லட்சம் பேர் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2 லட்சத்து 8 ஆயிரத்து 791 பேருக்கு இதுவரை பெருந்தொற்று தடுப்பூசிக்கான முதல் டோஸ் போடப்பட்டு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.






