--- --:--:-- --

வீட்டின் மேற்கூரை மீது விழுந்த 50 கிலோ எடையிலான பனிக்கட்டி..!

2

லங்கையில் வீட்டின் மேற்கூரை மீது 50 கிலோ எடையிலான பனிக்கட்டி விழுந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பதுமை மாவட்டம் ஆநிலை பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

அங்குள்ள ஒரு வீட்டின் மீது மாலையில் இருந்து அதிவேகத்தில் பனிக்கட்டி விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் மேற்குறை சேதம் அடைந்த நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

 

பனிக்கட்டி விழுந்த சம்பவத்தை கேள்விப்பட்ட உள்ளூர் மக்கள் சென்று அதனை வியப்புடன் பார்த்தனர். வானில் இருந்து கீழே விழுந்த பனிக்கட்டி சுமார் 50 கிலோ இடையில் இருந்ததாகவும், அது உருகுவதற்கு நீண்ட நேரம் ஆனதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

 

Right Menu Icon