--- --:--:-- --

கூட்டுறவு வங்கியில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி..!

4

கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடி குறித்து பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ள நிலையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் பெற்றவர்களின் விவரங்களை தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

 

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர்களுக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

 

அதில் 5 சவரன் வரை கடந்த மார்ச் 31ம் தேதி வரை நகை கடன் பெற்றவர்களின் விவரங்களை தயார் நிலையில் வைக்குமாறு தெரிவித்துள்ளார். கடன் பெற்றவர்களின் KYC விபரங்கள் குடும்ப விபரங்களை தயார் நிலையில் வைக்கவும் கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

இது தொடர்பான விபரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு வருகிற 16-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon