சென்னை மெட்ரோவில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை!
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையத்திற்கு 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நெரிசலை குறைக்கும் வகையில் வண்ணாரப்பேட்டை சென்னை விமான நிலையம் இடையே ஏழு நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்தது.
இந்த சேவையில் இரண்டு நிமிடம் குறைக்கப்பட்டு இன்று முதல் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே 2.5 நிமிடத்திற்கு ஒரு முறை ரயில் சேவையை வழங்குவதற்கான சோதனை ஓட்டங்களும் நடைபெற்றுவருகின்றன.
மற்றொரு வழித்தடமான சென்ட்ரல், பரங்கிமலை இடையே கூட்டம் அதிகமாக இருக்கும் போது பத்து நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கப்படும், என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் சின்னமலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தரமணி, டைடல் பார்க் மற்றும் ராமானுஜர் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு இன்று முதல் 20 ரூபாய் கட்டணத்தில் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.





