--- --:--:-- --

முதலமைச்சர் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது..!

4

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று நடைபெறுகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு கடந்த 17ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது.

 

ஆனால் முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக அந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், உயர் கல்வித்துறை அதிகாரிகள் மாநில கல்வி கொள்கையை விளக்கக்கூடிய குழுவின் தலைவர் உறுப்பின் தலைவர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

 

மேலும் உயர் கல்வித் துறை செயலாளர்கள், புதிய கல்விக்கொள்கை உயர் கல்வியின் தரத்தை உயர்த்துவது, பாடத்திட்டங்களை மேம்படுத்துவது, மாநில கல்வி கொள்கை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon