மைசூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது..!
கர்நாடக மாநிலத்தை உலுக்கிய மைசூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் அடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்பிஏ மாணவி ஒருவர் கடந்த புதன்கிழமை இரவு 7 மணியளவில் மைசூர் சாமுண்டி மலை பகுதியில் தனது நண்பருடன் பைக்கில் சென்றார்.
அப்போது வழிமறித்த கும்பல் அவர்களை தாக்கிவிட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மீட்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் நடந்த விசாரணையில் 6 பேர் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர்கள் தமிழில் பேசியதாகவும் மாணவி கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் செல்போன் சிக்னல் அடிப்படையில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சிறுவனும் இருப்பதாக கர்நாடக டிஜிபி தெரிவித்துள்ளார்.இவர்கள் மதுபோதையில் இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டதாக கூறியவர் தலைமறைவாக இருக்கும் மேலும் ஒருவரை தேடி வருவதாக கூறியுள்ளார்.







