எகிப்து தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உயிரிழப்பு..!
எகிப்து தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உயிரிழந்தனர். கிஸா நகரிலுள்ள தேவாலயத்தில் ஞாயிறு வழிபாட்டிற்காக 200 பேர் கூடியிருந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேவாலயத்தில் தீ பற்றியதால் அங்கிருந்து வெளியேற சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தேவாலயத்தின் மூன்று மற்றும் நான்காம் தளங்களில் ஏராளமானோர் கூடியிருந்த நிலையில் 2-வது தளத்தில் பற்றிய தீ வேறு இடங்களுக்கு பரவியதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 44 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் 50க்கும் அதிகமானோர் காயமடைந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக எகிப்து அதிபர் தெரிவித்திருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




