--- --:--:-- --

தமிழகத்தில் 4-வது நாளாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… இன்று 4410 பேருக்கு தொற்று… 49 பேர் உயிரிழப்பு

12

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 4410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 49 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 4 – வது நாளாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்து கொண்டே வருவது பெரும் ஆறுதலான விஷயமாக உள்ளது.

 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 மாதங்களாக உச்சத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 4 நாட்களாக அந்த உச்சத்திலிருந்து கீழே இறங்கத் தொடங்கியுள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இன்று 4410 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,74,802 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 49 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 10,472 ஆகவும் உயர்ந்துள்ளது.

 

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 5055 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இதுவரை 6,22,458 பேர் குணமடைந்து வீடு பியுள்ளனர்.
சென்னையில் மட்டும் மேலும் 1,148 பேருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அங்கு மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,86,667ஆக உயர்ந்துள்ளது.

 

சென்னைக்கு அடுத்தபடியாக கடந்த பல நாட்களாக கோவை மாவட்டம் தொடர்ந்து கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. இன்று கோவையில் 395, சேலம் 263, செங்கல்பட்டு 255, திருவள்ளுர் 192, திருப்பூர் 146 என மாவட்டங்களில் அதிகபட்சமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon