--- --:--:-- --

நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்..!

9

டிகர் கருணாஸிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் கருணாஸ் சென்னையில் இருந்து திருச்சி செல்ல சென்னை விமான நிலையத்துக்கு இன்று வந்திருந்தார்.

 

அப்போது அவரிடம் இருந்த கைப்பையை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் துப்பாக்கி குண்டுகள் இருந்தன.இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு வீரர்கள் அவரிடம் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை உடனடியாக பறிமுதல் செய்தனர்.

 

மேலும் அவரது திருச்சி பயணத்தையும் உடனடியாக ரத்து செய்தனர். இந்நிலையில், கருணாஸிடம் துப்பாக்கி குண்டுகள் வந்தது எப்படி என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

 

இந்நிலையில், துப்பாக்கி வைத்திருப்பதற்கான ஆவணங்கள் அனைத்தும் அவரிடம் சரியாக இருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக ஏற்கனவே அவருடைய துப்பாக்கியை திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் ஒப்படைத்து அதற்கான ஆவணங்கள் இருந்ததாலும் பறிமுதல் செய்த துப்பாக்கி குண்டுகளை மீண்டும் அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது.

Right Menu Icon