--- --:--:-- --

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 4 சாட்சிகளிடம் விசாரணை..!

12

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்னும் நான்கு சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.

 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி அப்பல்லோ நிர்வாகம் சார்பில் கொடுக்கப்பட்ட மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.

 

அப்போது வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைப்பதாக கூறினார். அப்பொழுது குறுக்கிட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தரப்பு வழக்கறிஞர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் இன்னும் நான்கு பேரை மட்டுமே விசாரிக்க இருப்பதாகவும் நீண்ட நாட்களாக இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் தங்களால் மேற்கொண்டு விசாரணை நடத்த முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon