கூடுதல் தளர்வுகள் குறித்து வரும் 29ஆம் தேதி ஆலோசனை..!
கொரொனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவர்களோடு முதலமைச்சர் வரும் 29ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
தமிழகத்தில் கொரொனா பரவல் சற்று குறைந்து இருக்கும் சூழலில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மீதமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எப்போது வகுப்புகளை தொடங்கலாம் என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். அதேபோல தடுப்பு ஊசி செலுத்தப்படும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சர் ஆலோசிக்கவும் இருக்கிறார்.







