கொரொனாத் தொற்றுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..!
கொரொனாத் தொற்றுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் ஓசூர் மக்களிடையே அச்சத்தில் உறைய வைத்துள்ளதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் வசித்து வரும் ஜீவா, வசந்தா மற்றும் கலா ஆகியோர் சகோதரிகள்.
சிறு வயது முதலே இணைபிரியாமல் இருந்து வந்த இவர்கள் அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு வசந்தா என்பவரது மகன் லோகேஷுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மூலமாக வசந்தா மற்றும் அவரது அக்கா, தங்கை அனைவருக்கும் நோய் தொற்று பரவியுள்ளது.
இதில் லோகேஷ் மட்டும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் அவரது தாய் வசந்தா, வசந்தாவின் சகோதரிகள் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். கலாவின் மகன் பாபு என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் ஓசூர் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.




