--- --:--:-- --

கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க ஆக்சிஜன் பேருந்து வசதி தொடக்கம்..!..!

9

கோவில் சொத்துக்கள் நிலங்களை காப்பாற்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்திருப்பதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை அயனாவரத்தில் உள்ள இ‌எஸ்‌ஐ மருத்துவமனையில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்க ஆக்சிஜன் பேருந்து வசதியை அவர் தொடங்கிவைத்தார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 10 ஆண்டு காலமாக ஆன்மீகம் என கூறி அரசியல் செய்தவர்கள் கோவில் சொத்துக்களை காப்பாற்றத் தவறி விட்டதாக குற்றம்சாட்டினார். கோவில் சொத்துக்கள் நிலங்கள் கட்டடங்கள் அனைத்தையும் காப்பாற்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு குறிப்பிட்டார்.

Leave a Reply

Right Menu Icon