உத்திர பிரதேசம் மற்றும் பீகாரில் இடி, மின்னல் தாக்கியத்தில் 31 பேர் பலி..!
பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் புதியதாக இடி, மின்னலுக்கு 31 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை வெள்ளத்தால் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் புதிதாக 31 பேர் இடி மின்னல் தாக்கி இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அசாமில் வெள்ளத்தில் மூழ்கி ஒருவர் பலியானார் ஏராளமான விளைநிலங்கள் மழையால் குளம் போல் காட்சியளிக்கின்றன. சுமார் 73 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் சேதம் அடைந்துள்ளன. 33 மாவட்டங்கள் 22 மாவட்டங்களில் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன.
அடுத்த 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களில் மழை கொட்டிய போதும் தலைநகரான டெல்லியில் இயல்பான பருவநிலையை காணப்படுகிறது.






