ஈராக்கில் குண்டு வெடிப்பில் 30 பேர் பரிதாபமாக பலி..!
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாக்தாத் அருகே சடர் நகரில் உள்ள சந்தையில் பக்ரீத் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க அதிக அளவில் பொதுமக்கள் கூடினர்.
அப்போது திடீரென பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இந்த தாக்குதலில் ஏராளமான பெண்கள் உட்பட 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஈராக்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகவும் மோசமான தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.






