நாசா விண்வெளி வீரர் படம் பிடித்த சூரிய உதயக் காட்சி..!
விண்வெளியில் இருந்து நாசா விண்வெளி வீரர் படம்பிடித்த சூரிய உதய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த விண்வெளி வீரர் பெகன்கென் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள 4 புகைப்படங்களில் வளைவான கோடு ஒன்றிலிருந்து சூரியன் உதயமாகும் ரம்மியமான காட்சி இடம் பெற்றுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையம் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்குள் பூமியை சுற்றி வருகிறது.
இதன் மூலம் 90 நிமிடங்களுக்குள் ஒன்று என்ற வீதத்தில் நாளொன்றுக்கு மொத்தம் 16 சூரிய உதயம்களை விண்வெளி வீரர்கள் பதிவு செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.






