திருப்பூர் ஸ்ரீ சரஸ்வதிகிரி பள்ளியில் 29-வது ஆண்டு விளையாட்டு விழா
திருப்பூர், பி.என் ரோடு, திருமலை நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் எமரால்டு இண்டர்நேஷனல் பள்ளிகளின் 29 வது ஆண்டு விளையாட்டு விழா ஸ்ரீ சரஸ்வதிகிரி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு பள்ளியின் தாளாளர் ஜெயாமோகன் தலைமை தாங்கினார். எமரால்டு இண்டர்நேஷனல் பள்ளி முதல்வர் ஜோசப் கிளைவ் வரவேற்றார்.
விழாவில் மாணவ மாணவிகள் உடற்பயிற்சி, யோகா, கராத்தே, லெஜிம் நடனம் ஆகியவற்றை மாணவர்கள் செய்து காண்பித்தனர். இதைத்தொடர்ந்து பிரி கே.ஜி முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாக அதிகாரி பிரபாவதி செய்து இருந்தார்.






