--- --:--:-- --

பட்டினப்பாக்கத்தில் அமைகிறதா புதிய தலைமைச் செயலகம்?

2

பட்டினப்பாக்கத்தில் பழைய குடியிருப்புகளை அகற்ற டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில், அங்கே புதிய தலைமைச் செயலகம் அமைகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.சென்னை பட்டினப்பாக்கத்தில் 20 லட்சம் சதுர அடியில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார். அடுத்த ஐந்து நாட்களில் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், பட்டினப்பாக்கம் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

 

புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர், மயிலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவ கிராம பஞ்சாயத்து சபைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் எதிர்ப்பை அடுத்து, பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகம் திட்டம் கைவிடப்படலாம் என்றும், மாற்று இடங்களை அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

 

 

இப்படி, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படுமா இல்லையா என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்து வரக்கூடிய நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அரசு வெளியிட்ட சர்வே எண்ணில் இடம் பெற்றுள்ள வீட்டு வசதி வாரியத்தின் பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் அமையும் இடத்தில் உள்ள, சேதமடைந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளை இடிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. 3.82 ஏக்கரில் அமைந்துள்ள 96 அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் டெண்டர் கோரியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon