--- --:--:-- --

யூடியூபர் மதுமிதா மீது நெல்லை போலீசார் வழக்குப்பதிவு!

4

யூடியூப்பர் மதுமிதா தன்னிடம் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதான கூறி காண்ட்ராக்டர் பேச்சிமுத்து என்று என்பவர் நெல்லை தாலுகா ராஜகால்மங்களம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் மதுமிதா.

 

 

யூடியூப் பிரபலமான இவர், தனது சோஷியல் மீடியா கணக்குகளில் கிலோ கணக்கில் தங்கம் மற்றும் பணக்கட்டுகளை காட்டி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரது வீடியோக்களைப் பார்த்து ஈர்க்கப்பட்ட சிலர், சமீபத்தில் இவரது வீட்டிற்குள் புகுந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 118 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

 

 

இது குறித்து அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய போலீசார் நான்கு குற்றவாளிகளையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 98 சவரன் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த திருட்டு வழக்கின் விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருக்கும்போது திடீர் திருப்பமாக திருநெல்வேலியைச் சேர்ந்த கான்ட்ராக்டர் பேச்சிமுத்து என்பவர் மதுமிதா மீது போலீசில் புகார் அளித்தார்.

 

 

கடந்த 2022-ல் மதுமிதா தன்னிடம் பழக்கம் ஏற்படுத்திக்கொண்ட மதுமிதா, பயணத்தின் போது தனது கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டதாகவும், எதிர்த்து கேட்டதற்கு கடுமையாக மிரட்டியதாகவும் குற்றம் சாட்டி புகார் அளித்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து ராஜகால்மங்கலம் போலீசார் மதுமிதா மீது மற்றொரு எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்தனர். ஒருபுறம் திருட்டு வழக்கு விசாரணை, மறுபுறம் தன் மீதே பதிவான நகை பறிப்பு வழக்கினால் கடும் அதிர்ச்சியடைந்த மதுமிதா தனது கணவர் மற்றும் மகளுடன் தலைமறைவானார்.

 

 

வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காகவே அவர் மாயமாகியிருப்பதாக சந்தேகிக்கும் போலீசார், தற்போது அவரைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே மதுமிதா மீது புகார் அளித்த கான்ட்ராக்டர் பேச்சிமுத்துவிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர், இந்த விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான மதுமிதாவுக்கு சம்மன் அனுப்பி அவரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர், இந்த வழக்கு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon