த.வெ.க அரசின் மீது மக்கள் வெளிப்படுத்திய நம்பிக்கைதான் இடைத்தேர்தல் வெற்றி: வைகோ வாழ்த்து
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் அமோக வெற்றி பெற்றுள்ளதற்கு ம.தி.மு.க சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
த.வெ.க தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் பேராதரவையும் நம்பிக்கையையும் இரு தொகுதி வாக்காளர்களும் வெளிப்படுத்தியுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், வெற்றிக்குக் காரணமாக இருந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் வாக்காளப் பெருமக்களுக்குத் தனது நன்றியினையும் பதிவு செய்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




