--- --:--:-- --

100% விஜய்யின் பிரசாரத்திற்குக் கிடைத்த வெற்றி : மரகதம் குமரவேல்

7

100% விஜய்யின் பிரசாரத்திற்குக் கிடைத்த வெற்றி: மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி பேட்டி
மதுராந்தகம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கு முதற்கண் கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகத் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தெரிவித்துள்ளார்.

 

 

இவ்வளவு பெரிய பிரம்மாண்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னணி பெற்று வெற்றிப் பாதையில் பயணிக்கிறோம் என்றால் அதற்கு முதலமைச்சர் விஜய்யின் முகமும் அவரின் மக்கள் செல்வாக்குமே முழு காரணம் என்று குறிப்பிட்ட அவர், எதிர்த்தரப்பினர் எவ்வளவு பொய் பிரசாரங்களைச் செய்தபோதிலும் மதுராந்தகம் மக்கள் த.வெ.க மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை என்பதை நிரூபித்துள்ளதாகக் கூறினார்.

 

 

மேலும், இந்த தேர்தல் முடிவு எதிர்க்கட்சிகளுக்குப் பாடமாக இருக்கும் என்றும், இந்த வெற்றி 100 சதவீதம் முதலமைச்சர் விஜய் மேற்கொண்ட தீவிரப் பிரசாரத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் மன மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon