தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலுமே வெற்றி பெற்றுத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் மட்டுமின்றித் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க) தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீதிகளில் பட்டாசுகளை வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடன் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் தங்களது வெற்றிக் களிப்பைப் பறைசாற்றி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




