புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் விஜய்?
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு, அவர்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாகச் மேற்கொள்வதற்காகக் கார் மற்றும் உதவியாளரை வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காட்டுமன்னார்கோயில் தொகுதி எம்.எல்.ஏ ஜோதிமணி, “பொருளாதார வசதி இல்லாததால் தொகுதி முழுவதும் சென்று ஆய்வு செய்யத் தேவையான வாகன வசதிகள் இல்லை” எனக் கூறி, அவைத் தலைவரிடம் சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தார்.
பல உறுப்பினர்களின் நிலையும் இதேபோலத்தான் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டிய நிலையில், இக்கோரிக்கையைப் பரிசீலித்து முதலமைச்சர் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




