--- --:--:-- --
8

டுத்த பரபரப்பான திருப்பமாக அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஓ.பன்னீர்செல்வம் இருந்ததால், த.வெ.க.வில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கவும் முதலமைச்சர் விஜய் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

 

விரைவில், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலில் அதே தொகுதியில் த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். மேலும் 2029-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் த.வெ.க. சார்பில் களம் இறக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

 

ஓ.பன்னீர்செல்வம் த.வெ.கவில் இணைவதன் மூலம் தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வில் இருந்து விலகி த.வெ.கவில் இணையும் முதல் நபர் ஆவார். சட்டசபை தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. மற்றும் மற்ற கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க.வில் பலர் இணைந்துள்ள நிலையில், தி.மு.க.வில் இருந்து யாரும் இதுவரை விலகவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon