தி.மு.க. வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு, பின்னாளில் தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரை பெறவும், தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் இருக்கவும், தேவையான அனைத்து வலுவான நடவடிக்கைகளையும் முதல்வர் எடுப்பார் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.