நாடாளுமன்றம் நோக்கி கரப்பான் பூச்சி கட்சி பேரணி – போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி
திங்கள் கிழமை ஜந்தர் மந்தர் அருகே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியி பேரணியின் போது, நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினரை காவல்துறையினர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டதால், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் டெல்லி காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். இந்த மோதல் நடந்தபோது, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவும் போராட்ட இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




