--- --:--:-- --

ரஜினியின் பெயரை கட்சிக்கோ அமைப்புக்கோ பயன்படுத்தக் கூடாது – ரசிகர் மன்றம் அறிக்கை

02

ரஜினிகாந்தின் பெயரையோ, புகைப்படத்தையோ எந்த ஒரு கட்சிக்கோ அல்லது அமைப்புக்கோ பயன்படுத்தக் கூடாது என அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் சில ஆண்டுகள் முன் அரசியலில் ஈடுபட போவதாகவும் கட்சித் தொடங்க போவதாகவும் அறிவித்து பின்னாளில் அந்த அறிவிப்பை உடல்நல காரணத்தினால் வாபஸ் வாங்கினார். தொடர்ந்து சினிமாவில் நடிப்பதில் பிஸியாக இருக்கிறார்.

 

 

இந்த நிலையில் தான் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சித் தொடங்கப்போவதாக அறிவித்துள்ள அண்ணாமலை, கட்சி ஆரம்பிக்கும்போதே தன்னை கட்சியில் ரஜினிகாந்த் வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதேபோல் அரசியலுக்கு வர வேண்டாமா என மக்களிடம் கேள்வி கேட்டுள்ள நடிகர் ராகவா லாரன்ஸும் ரஜினி அரசியல் கட்சி தொடங்கியபோது அதில் இணையவிருந்ததாக தெரிவித்திருந்தார்.

 

 

மேலும் ரஜினியின் மனைவி லதா அண்மையில் ஒரு இயக்கம் தொடங்கினார். இந்த நிலையில் தான் எந்த அரசியல் கட்சிகளும் ரஜினிகாந்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது என அவரின் ரசிகர் மன்றம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon