--- --:--:-- --

ஆட்டோ, கார்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை உயர்வு..!

4

ட்டோ மற்றும் கார்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி இன்று காலை மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

 

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதன் காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.103.98க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.3.11 உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.95.25க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

 

இந்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக, ஆட்டோ மற்றும் கார்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து, சென்னையில் ரூ.91.50ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை 3 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் சிஎன்ஜி எரிவாயு விலையும் உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon