--- --:--:-- --

மெட்ரோ ரயில் பழைய டிராவல் கார்டுகள் ரத்து..!

10

மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய இதுவரை பயன்படுத்தப்பட்டு வந்த பழைய பயண அட்டைகளுக்குப் பதிலாக, ‘சிங்கார சென்னை அட்டை’ (தேசிய பொதுப் போக்குவரத்து அட்டை – NCMC) முறைக்கு முழுமையாக மாற மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்வதே இந்த மாற்றத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

 

இந்த புதிய நடைமுறை நாளை (மே 1-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. இதனால், தற்போது பயணிகள் பயன்படுத்தி வரும் பழைய மெட்ரோ பயண அட்டைகள் நாளை முதல் செல்லாது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, மெட்ரோ ரயிலில் தொடர்ந்து பயணிக்க விரும்பும் பயணிகள் அனைவரும், தங்களின் பழைய அட்டைகளை ஒப்படைத்துவிட்டு, அதற்குப் பதிலாக புதிய ‘சிங்கார சென்னை அட்டை’யாக மாற்றிக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. நாளை முதல் இந்தப் புதிய மாற்றம் அமலுக்கு வருவதால், பயணிகள் தடையின்றி பயணிக்க முன்கூட்டியே புதிய அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon