தமிழ்நாட்டில் அடுத்த மாதம் மின் பற்றாக்குறை அதிகரிக்கும்
மின் தேவை அதிகம் உள்ள தென் மாநிலங்களில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதனால், அடுத்த மாதம் முதல் மின் பற்றாக்குறை அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்து உள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில், 2025 மார்ச் மாதத்துடன், கடந்த மார்ச் மாத நிலவரத்தை ஒப்பிட்டு, மின் தேவை விபரங்களை, மத்திய மின் துறை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, தென் மாநிலங்களின் தினசரி மின் தேவை, 69,934 மெகாவாட்டில் இருந்து, 73,805 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில், 19,679 மெகாவாட்டில் இருந்து, 19,822 மெகாவாட்டாக, மின் தேவை உயர்ந்து, முதலிடத்தில் உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




