மார்ச் 6இல் சனிப்பெயர்ச்சி.. சொல்ல வேண்டிய ஸ்லோகம்!

மார்ச் 6, 2026 அன்றைய தினம் ஒரு மிகப்பெரிய கிரக மாற்றம் நிகழப்போகிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் தனது இடத்தைப் பெயர்ச்சி செய்கிறார். உங்கள் ராசிக்கு இது அதிர்ஷ்டமா அல்லது எச்சரிக்கையா? தெரிந்து கொள்ளுங்கள்!

 

கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு (குருவின் வீட்டிற்கு) சனி பகவான் நுழைகிறார். பூரட்டாதி நட்சத்திரம் 3-ம் பாதத்தில் இருந்து 4-ம் பாதத்திற்குச் செல்லும் சனி பகவான், அடுத்த இரண்டரை ஆண்டுகள் அங்கேயே அமர்ந்து ஆட்சி செய்யப் போகிறார்.

சனி அமரும் இடத்தை விட, அவர் பார்க்கும் இடங்களுக்குத்தான் சக்தி அதிகம்! இந்த முறை சனி பகவான் தனது 3, 7, 10 ஆகிய பார்வைகளால் மூன்று ராசிகளைப் பார்க்கப் போகிறார்.

 

அதாவது, ரிஷபம், கன்னி, தனுசு ராசிகள் மீது அவரது பார்வை விழுகிறது. ரிஷபத்தை பொறுத்தவரை சனியின் 3-ம் பார்வை உங்கள் மீது விழுகிறது. பெரும் மாற்றங்களுக்குத் தயாராகுங்கள்.

 

சனியின் 7-ம் நேர் பார்வை கன்னி ராசிக்காரர்கள் மீது விழுவதால், வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். சனியின் 10-ம் பார்வை தனுசு ராசிக்காரர்கள் மீது படுவதால், தொழில் மற்றும் கர்ம பலன்களில் விருத்தி உண்டாகும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய ‘டர்னிங் பாயிண்ட்’ அமையப்போவது உறுதி.

சனி பகவான் சங்கடங்களைத் தந்தாலும், இறுதியில் பலத்தையும் விருத்தியையுமே தருவார். சனியின் பார்வையால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க, இந்த சக்திவாய்ந்த ஸ்லோகத்தைச் சொல்லுங்கள்:

 

‘நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்!’

 

தினமும் காலையில் இந்த ஸ்லோகத்தைச் சொல்லி சனி பகவானை வழிபடுங்கள், தடைகள் யாவும் தகர்ந்து நன்மைகள் பெருகும்.

 

இந்தத் தகவல் உங்கள் நண்பர்களுக்கும் பயன்படட்டும், எனவே அவர்களுக்கும் பகிருங்கள். சனி பகவான் அருளால் அனைவருக்கும் நன்மைகள் பெருகட்டும்.


Leave a Reply