--- --:--:-- --
2

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னன் இராஜராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணையில் ஏறிய ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தை ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல் மாமன்னன் இராஜராஜ சோழனின் 1,041-வது சதய விழா அரசு விழாவாக நேற்றும் (21 மற்றும் 22) மற்றும் இன்றும் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

 

 

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், “தமிழர்களின் பெருமையையும், தமிழர் கட்டடக்கலை மற்றும் நிர்வாகத் திறனின் மகத்துவத்தையும் உலகரங்கில் நிலைநாட்டிய மாமன்னர் இராஜராஜ சோழனின் 1041-ஆவது சதய விழா நன்னாளில் அவருக்கு எனது புகழ் வணக்கங்கள்.

 

 

ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில் மூலம் தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் கட்டடக்கலைச் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிய அவரது வரலாற்றுப் பெருமை என்றும் நிலைத்து நிற்கும். தமிழர் பெருமையைப் போற்றுவோம்! தமிழர் வரலாற்றையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon