விவசாய கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து..!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி பகுதியில் திருவண்ணாமலை – திண்டிவனம் சாலையில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள விவசாய கிணற்றில் மூழ்கியதில் காரில் பயணித்த சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வினோத் ராஜா, ஞானவேல், சேகர் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர்.

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பௌர்ணமி கிரிவலம் சென்றுவிட்டு சென்னை நோக்கி சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த சத்தியமங்கலம் காவல் நிலைய போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் முழ்கிய காரை மீட்டனர். காரில் பயணித்த மேலும் ஒருவரை கிணற்றில் தேடி வருகின்றனர்

 

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலை ஓரம் பாதுகாப்பற்ற முறையில் உள்ள கிணறுகளை முறையாக பராமரிக்க வேண்டும், பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று அடிக்கடி அறிவுரைகளை வழங்கியும் பொறுப்பற்ற முறையில் விவசாயக் கிணறு சாலையோரம் இருந்தது.

 

இதன் காரணமாகவே இன்று மூன்று வழக்கறிஞர்கள் தங்கள் உயிரை விட்டுள்ளனர். இவற்றை முறையாக பராமரிக்க வேண்டிய அதிகாரிகள் தங்கள் பணியை கடமையுடனும், பொறுப்புடனும் செய்தால் இதுபோன்ற சம்பவங்கள் இனி தொடராது என பொதுமக்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.