--- --:--:-- --

சாமுண்டிபுரம் அறிவு திருக்கோவில் சார்பில், ஸர்வ வஸ்ய தனாஹர்ஷண சங்கல்பம் செய்து குற்றம் குற்றமே இதழுக்கு பேராசிரியர்கள் வாழ்த்து

fhfhh

லகெங்கும் அமைதி நிலவவும், மனித மனம் மாசற்றுத் திகழவும் தன் வாழ்நாளெல்லாம் தவமிருந்த தவயோகி, தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலகிற்கு அளித்த உன்னதக் கொடை ‘அறிவுத் திருக்கோயில்’. கல்லால் ஆன சிலைகளைத் தொழுவதைத் தாண்டி, கருவிலே உருவான மனித அறிவையே கோயிலாகப் பாவித்து, அதைச் செதுக்கும் உன்னதப் பணியை ஆற்றி வருகிறது இந்த  ஞானபீடம்.

 

திருப்பூர் சாமுண்டிபுரத்தில் அமைந்துள்ள இந்த அறிவுத் திருக்கோயில், அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் மனவளக்கலைத் தத்துவங்கள் மலரும் ஒரு புனிதமான தவக்கூடமாகும். ஆஷர் நகர் வளையங்காடு பிரதான சாலையில், ஆன்மிக ஒளி வீசும் ஒரு கலங்கரை விளக்கமாக இது திகழ்கிறது.

 

இந்த அறிவுத்திருக்கோயில் யோகா மற்றும் மனவளக் கலை சார்ந்த பயிற்சிகளுக்குப் புகழ்பெற்றது.
இங்கே எளிய முறை உடற்பயிற்சி, காயகல்ப பயிற்சி, தியானம் மற்றும் அகத்தாய்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.  மக்கள் அமைதி மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ வழிகாட்டுவதே இவர்களின் முக்கிய நோக்கம். அதற்காக தன்னலம் பாராமல் அமைதிக்கான வழிமுறைகளை செய்து வருகின்றனர்.

 

புனிதமான ஆன்மிகப் பணிகளையும், சமுதாய நலனையும் முன்னிறுத்தும் அறிவுத் திருக்கோயில்  பேராசிரியர்கள் நேர்மையின் குரலாய் ஒலிக்கும் ‘குற்றம் குற்றமே’ வார இதழின் புதிய அலுவலகத்துக்கு வருகை புரிந்து, ஸர்வ வஸ்ய தனாஹர்ஷண சங்கல்பம் செய்து , வாழ்த்தியது பெருமைக்குரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

 

சாமுண்டிபுரம் அறிவுத் திருக்கோயில் பேராசிரியர்கள் நமது  நிறுவனம் மென்மேலும் அபிருத்தி அடையும் குற்றம் குற்றமே இதழ், மேலும்  பல சமூக சேவைகளை செய்து நியாயத்தின் பக்கம் நின்று தொண்டாற்ற வேண்டும் எனவும் வாழ்த்தினர்.

 

சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சுட்டிக்காட்டி, நீதியை நிலைநாட்டும் பணியைச் செய்யும் ‘குற்றம் குற்றமே’ இதழ், மக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புகிறது.

 

அறிவுத் திருக்கோயில் மனிதனின் உள்ளிருக்கும் குற்றங்களை (ஆணவம், கன்மம், மாயை) நீக்கப் போராடுகிறது; ‘குற்றம் குற்றமே’ இதழ் சமுதாயத்தில் நிலவும் குற்றங்களைச் சாடுகிறது. இரண்டும் இணையும் போது ஒரு தார்மீகமான, அறநெறி சார்ந்த சமுதாயம் உருவாவது உறுதி.

 

“அறிவே தெய்வம்” என்ற உண்மையை உணர்ந்து, ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தான் திருத்திக் கொண்டால், உலகில் குற்றங்கள் குறையும்.

 

‘குற்றம் குற்றமே’ வார இதழ் மென்மேலும் பல வெற்றிகளைக் குவித்து, வாசகர்களின் வாழ்வில் நற்சிந்தனைகளை விதைக்க தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அருளாசி வேண்டும் என்ற அறிவுத்திருக்கோவில் பேராசிரியர்களின் வாழ்த்துக்கு குற்றம் குற்றமே சார்பில் நன்றியை உரித்தாக்குகிறோம்.

 

மானுடம் அமைதியாகவும், மனநிறைவோடும் வாழ்ந்திட அரும்பணியாற்றும் சாமுண்டிபுரம் அறிவுத் திருக்கோவிலின்  தன்னலமற்ற சேவை போற்றுதலுக்குரியது. “குற்றம் குற்றமே” குழுமத்தின் சார்பாக, மனிதகுல நல்வாழ்விற்காகப் பாடுபடும் அறிவு திருக்கோவில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  எங்களது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம்.

 

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon