ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பெரிய கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. தைப்பூச நன்னாளையொட்டி, முருகப் பெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
அபிஷேகத்தைத் தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், “அரோகரா” கோஷம் எழுப்பி முருகப் பெருமானை மனமுருகி வழிபட்டனர்.
விழாவில் கலந்துகொண்ட அனைத்து பக்தர்களுக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள் :
மாலத்தீவில் நீச்சல் உடையில் நடிகை ஸ்ரேயா சரண்..!
தேர்தல் விருப்ப மனுக்களை சமர்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு - த.வெ.க அறிவிப்பு
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்- மீண்டும் பரப்புரை தொடங்கும் இ.பி.எஸ்
பிப். 15 முதல் சுங்கக் கட்டணம் மாற்றம்..!
தேர்தலுக்காக கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க அவருக்கு மனம் வரவில்லை: சிவசங்கர்






