--- --:--:-- --

தவெக நிகழ்ச்சியில் விஜய் நடனம்..!

3

தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய் இசை கச்சேரியில் நடனமாடி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.

 

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி கட்சியை தொடங்கினார். அதை தொடர்ந்து தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்ரவாண்டியில் நடைபெற்றது. விக்ரவாண்டி மாநாட்டிற்கு கிடைத்த சிறப்பான வரவேற்பை தொடர்ந்து மதுரையில் அடுத்த மாநாடு நடைபெற்றது.

 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தீவிரமாக இறங்கிய தவெக தலைவர் விஜய் திருச்சியில் தனது முதல் தேர்தல் பரப்புரையை தொடங்கினார். கரூர் சம்பவத்தை தொடர்ந்து தவெக மக்கள் சந்திப்புக்கு சிக்கல் இருந்து வந்தது. அதை தொடர்ந்து தற்போது மீண்டும் தனது பரப்புரையை விஜய் தொடங்கி உள்ளார்.

 

இந்நிலையில் தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழா, பனையூர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பனையூர் வந்த தவெக தலைவர் விஜயை பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர்.

 

இதை தொடர்ந்து பனையூர் அலுவலகத்தில் தவெகவின் கொள்கை தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி விஜய் மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் தவெக கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது பாடகர் வேல்முருகனின் இசை கச்சேரியில் விஜய் உற்சாகமாக நடனமாடினார். அப்போது அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விசில் அடித்து கொண்டாடினர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon