--- --:--:-- --

திமுக ‘என் வாக்குச்சாவடி வெற்றி’ பிரசாரம் இன்று தொடக்கம்..!

1

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி புதிய பிரசாரத்தை திமுக இன்று தொடங்குகிறது. திமுகவின் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை நிகழ்ச்சியில் இன்று தொடங்கவுள்ள நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

 

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அந்த வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவினரை உற்சாகத்துடன் ஈடுபடுத்தும் விதமாக “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” என்ற முன்னெடுப்பை திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வாக்குச்சாவடிக்குட்பட்ட மாநில நிர்வாகி முதல், வார்டு மற்றும் கிளைச் செயலாளர்கள் வரை அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடு வீடாக செல்லும் பூத் கமிட்டி குழுக்களில் மகளிர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் திமுக தலைமை அறிவித்துள்ளது. இதனிடையே தேனாம்பேட்டையில் திமுக பகுதிச்செயலாளர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon